ஆரியின் தவறை சுட்டிக்காட்ட தயங்கும் கமல்: இதிலும் அரசியலா?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய ஆரி மிகவும் புத்திசாலித்தனமாக நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்வது போல் இருந்தாலும் அவருடைய செயல்கள் சில நேரங்களில் சர்ச்சைக்குரிய வகையில் தான் இருக்கிறது 

தவறை சுட்டிக்காட்டி அறிவுரை கூறுவது போல் எந்த ஒரு போட்டியாளரின் நல்ல நிகழ்வுகளை அவர் பாராட்டியது மிகவும் குறைவு. குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

aari

பாலாஜி கூறியதுபோல் சோம்பேரியாக இருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்வதும் ஆரியின் தவறுகளில் ஒன்றாகும். ஆரியிடம் பல நிறைகள் இருந்தாலும் ஒரு சில குறைகளும் உள்ளன என்பதும் ஆனால் அந்த குறைகளை, பாலாஜி உள்பட மற்றவர்களுக்கு சுட்டிக் காட்டியது போல் கமல், ஆரிக்கு சுட்டிக்காட்டவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது 

ஆரிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை விமர்சனம் செய்தால் தனது அரசியல் வாழ்வுக்கு பின்னடைவாக இருக்கும் என்று கமல் கருதலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது 

மொத்தத்தில் நேற்றைய எபிசோடில் பாலாஜி, ரம்யா மற்றும் ரியோ ஆகியோரை கமல்ஹாசன் வறுத்தெடுத்தது சரியான ஒரு நடவடிக்கைதான் என்றும் இதே நடவடிக்கையை ஆரியிடமும் எடுத்து இருக்கலாம் என்பதே பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது

From around the web