கொள்ளைநோய் நமைக் கொல்லும்போதும் மானுடம் மீண்டிடும்: கமல்ஹாசன் கவிதை

உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது சமூக கருத்துக்களையும், கவிதைகளையும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருவார். இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா என்னும் கொள்ளை நோயால் தனது கட்சியின் தொடர் தீபக் என்பவர் மரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை எழுதியுள்ளார். வீரவணக்கம்’ என்ற பெயரில் கமல் எழுதிய கவிதை இதோ: வீரவணக்கம்! வீரவணக்கம் வீரவணக்கம்வீழும் இவ்வுடல் என்று உணர்ந்துவிழைந்து ஈகைசெய்தவருக்குவீரவணக்கம்! வீரவணக்கம்! கொள்ளை
 
கொள்ளைநோய் நமைக் கொல்லும்போதும் மானுடம் மீண்டிடும்: கமல்ஹாசன் கவிதை

உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது சமூக கருத்துக்களையும், கவிதைகளையும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருவார். இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா என்னும் கொள்ளை நோயால் தனது கட்சியின் தொடர் தீபக் என்பவர் மரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

வீரவணக்கம்’ என்ற பெயரில் கமல் எழுதிய கவிதை இதோ:

வீரவணக்கம்!

வீரவணக்கம் வீரவணக்கம்
வீழும் இவ்வுடல் என்று உணர்ந்து
விழைந்து ஈகை
செய்தவருக்கு
வீரவணக்கம்! வீரவணக்கம்!

கொள்ளை நோய்
நமைக்
கொன்று குவிக்கும்
வேளையிலும்
சக மானுட சேவை
கடமை
என்ற
முன் அணிகட்கு
வீரவணக்கம்!
நம்மவருக்கு வீரவணக்கம்

காலை என்றொரு பொழுதில்லாமல்
காலம்
உலகில்
கழிந்தது இல்லை…

நாளை என்ற
கனவில்லாமல்
இரவுகள்
என்றும்
கடந்தது இல்லை…

வேலை என்று ஏற்பது அல்ல,
வீடும்,சுற்றமும்,நாடும் எல்லாம்..

தோலை உரித்து ஆராய்ந்திடினும்
வண்ணம் என்பது
ஒளி மாயை தான்.

உள்ளே இருக்கும் உயிரூட்டங்கள்
அனைவருக்குமே பொருந்தும், எனவே
கொள்ளைநோய்
நமைக் கொல்லும்போதும்
மானுடம் மீண்டிடும்
மந்திரம் சொல்வோம்.

நானெனும்
அகந்தை மறந்த
மனிதர்
நிதமும் பேசும்
உண்மைச் சொல்
அது.

மாயமும் இல்லை! மந்திரமில்லை!!

நம்மை மிஞ்சும்
ஈகையும் அன்பும்!!!

தாயிடம் கற்றது
போதாதென்றால்
வாழ்விடம் கற்பீர்,
வேறேது வழி?

வீரவணக்கம் என்றிடும் கோஷம்,
வீழ்ந்தவருக்கு மட்டும் அன்று….
நாளை
என்றொரு
நாளை நோக்கி
நடக்கும்
நம்மவர் அனைவருக்குமே….

நாளை நமதே

From around the web