லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கமல் அல்லது ரஜினி? கிடைத்தது புதிருக்கான விடை!

 

’மாநகரம்’ படத்தையடுத்து கார்த்தி நடித்த ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் ஜாக்பாட்டாக தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படம் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் அவர் முன்னணி இயக்குனர் பட்டியலை நோக்கி சென்று விட்டார் என்பதும், தற்போது அவருக்கு பல மடங்கு சம்பளம் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

மேலும் பல தயாரிப்பாளர்கள் அவரை தங்கள் நிறுவனத்திற்கு படம் இயக்கி தருமாறு கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தை கமலஹாசன் தயாரிக்க உள்ளதாகவும் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது

ஆனால் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்கவில்லை என்ற தகவலை அடுத்து கமலஹாசனே அந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் தான் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் அவர் இயக்குவது கமலஹாசனையா? அல்லது ரஜினிகாந்த்தா? என்பது தெரியவரும்

From around the web