எஸ்பிபி பிரார்த்தனையில் காணாமல் போன கமல்ஹாசன்: என்ன காரணம்?

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என்பதற்காக நேற்று மாலை 6 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஏற்பாடு செய்த இந்த கூட்டுப் பிரார்த்தனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏஆர் ரகுமான், கவியரசு வைரமுத்து உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டு பிரார்த்தனை
 

எஸ்பிபி பிரார்த்தனையில் காணாமல் போன கமல்ஹாசன்: என்ன காரணம்?

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என்பதற்காக நேற்று மாலை 6 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஏற்பாடு செய்த இந்த கூட்டுப் பிரார்த்தனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏஆர் ரகுமான், கவியரசு வைரமுத்து உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது

இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டு பிரார்த்தனை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது. இதில் கமலஹாசன் புகைப்படம் மட்டும் மிஸ்ஸிங் ஆனதால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்

பகுத்தறிவாளரான கமலஹாசனுக்கு பிரார்த்தனை மீது நம்பிக்கை இல்லை என்பதால் அவர் இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் எஸ்பிபி குணமாக வேண்டும் என்று ஆத்மார்த்தமாக விருப்பம் அவருக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது

இருப்பினும் தனது நண்பர் எஸ்பிபி கமலஹாசன் தனது பகுத்தறிவுக் கொள்கையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு பிரார்த்தனை செய்து இருக்கலாம் என்று அவரது ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

From around the web