நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது: பிக்பாஸ் நடத்தப்போகும் கமல் டுவீட்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் அதிகபட்ச தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி விட்டது என்றே கூறலாம் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதும், வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளதும், பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளதும் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும் இந்த தளர்வுகளை தேவையில்லாமல் பயன்படுத்தி ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர் தமிழக அரசு அறிவித்துள்ள
 

நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது: பிக்பாஸ் நடத்தப்போகும் கமல் டுவீட்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் அதிகபட்ச தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி விட்டது என்றே கூறலாம்

பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதும், வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளதும், பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளதும் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும் இந்த தளர்வுகளை தேவையில்லாமல் பயன்படுத்தி ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த தளர்வுகளை அவசியத்துக்கு மட்டும் பயன்படுத்துமாறும் அவசியம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ’நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது’ என்ற கருத்தை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும். #நாமேதீர்வு என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அவர் படப்பிடிப்புக்கு செல்வது மக்களுக்கும் அவருக்கும் எந்த அளவுக்கு அவசியம் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது

From around the web