கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பர்ஸ்ட்லுக்: இந்த படத்தின் காப்பியா?

 
vikram

கமலஹாசன் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் இன்னொரு படத்தின் காப்பி என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த போஸ்டரில் கமல்ஹாசனின் மூன்று வித்தியாசமான காட்சிகள் உள்ளன.

vikram

இந்த போஸ்டரை கமல் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வரும் நிலையில் மற்றொரு பக்கம் இந்த படத்தின் போஸ்டர் விருமாண்டி படத்தின் போஸ்டரின் காப்பி என ரசிகர்கள் பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருமாண்டி படத்தில் கமல்ஹாசன் பசுபதி மற்றும் நெப்போலியன் ஆகிய மூவரும் இருக்கும் போஸ்டர் போலவே கமல்ஹாசனின் மூன்று தோற்றங்களில் ‘விக்ரம்’ படத்தின் போஸ்டரில் இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். 

மேலும் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

From around the web