முதல்வருக்கு நன்றி தெரிவித்து டுவிட் போட்ட கமலஹாசன்: பரபரப்பு தகவல் 

 

உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் முதல்வருக்கு நன்றி தெரிவித்து டுவிட் பதிவு செய்துள்ளார் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்றும், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் திரையுலகினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 

ஏற்கனவே புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார் 

இந்த கடிதம் குறித்து கருத்து கூறிய உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் ’எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் தமிழகத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கே சொந்தமானவர் என்றும், அவருக்கு விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மாண்புமிகு ஆந்திர முதல்வர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக முதல்வரிடமிருந்து இன்னும் இந்த கோரிக்கை வரவில்லை என்பது அனைவருக்கும் ஏமாற்றமாக உள்ளது

From around the web