சாண்டியின்மீது கடுப்பான கமல் ஹாசன்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது, காதல்- பாசம்- சண்டை- ரொமான்ஸ் என ஒரு திரைப்படம்போல சென்று கொண்டிருக்கிறது. வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகை புரிந்தார், அறிமுகம் மிக வித்தியாசமான முறையில் இருந்தது, அதாவது 60 கேமராக்களைக் கண்காணிக்கும் அறையில் இருந்தவாறு மக்களை வரவேற்றார். அதன் பிறகு பைக் மாடல் டாஸ்க் நடந்தது. இறுதியில், இந்த டாஸ்க்கில் தர்ஷன் வெற்றி பெற்றார். எப்போதும் கமல்ஹாசனுக்கு பேவரேட்டாக இருந்த, சாண்டியிடம் கடிந்துகொண்டார் கமல்
 
சாண்டியின்மீது கடுப்பான கமல் ஹாசன்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது, காதல்- பாசம்- சண்டை- ரொமான்ஸ் என ஒரு திரைப்படம்போல சென்று கொண்டிருக்கிறது.

வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகை புரிந்தார், அறிமுகம் மிக வித்தியாசமான முறையில் இருந்தது, அதாவது 60 கேமராக்களைக் கண்காணிக்கும் அறையில் இருந்தவாறு மக்களை வரவேற்றார்.

சாண்டியின்மீது கடுப்பான கமல் ஹாசன்!!!

அதன் பிறகு பைக் மாடல் டாஸ்க் நடந்தது. இறுதியில், இந்த டாஸ்க்கில் தர்ஷன் வெற்றி பெற்றார்.

எப்போதும் கமல்ஹாசனுக்கு பேவரேட்டாக இருந்த, சாண்டியிடம் கடிந்துகொண்டார் கமல் ஹாசன். கஸ்தூரியை எப்போதும் பட்டப்பெயர் வைத்து அழைப்பவர்கள் சாண்டியும்- கவினும் ஆவர்.

கிண்டர் கார்டன் டாஸ்க்கின்போது, சத்துணவு ஆயா மாதிரி கஸ்தூரி இருப்பதாக கூறினார் சாண்டி, எப்போதும் அவருடன் இருக்கும் கூட்டம் அதற்கு நகைக்கவே செய்தது.

வசதியில்லாத பல குழந்தைகள் பட்டதாரியாக உருவாக காரணம் சத்துணவுதான், அதனைப் பரிமாறும் தாயமார்களைப் பற்றி கிண்டல் செய்தது மன வருத்தத்திற்குரிய விஷயமாகும் என்று தெரிவித்தார்.

ஜகன்மாதா என்று அவர்களைக் குறிப்பிட்டதோடு, இதுபோன்ற மனதைப் புண்படுத்தும்படியான கிண்டல்களைத் தவிர்த்தல் நல்லது என்று அறிவுரை கூறினார்.

From around the web