கமல்ஹாசன் பட பாடலை வெளியிட்ட ‘மாஸ்டர்’ இயக்குனர்

 

கமல்ஹாசன் நடித்த படத்தின் பாடல் ஒன்றின் ரீமேக்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 

கமலஹாசன் நடிப்பில் உருவான சிம்லா ஸ்பெஷல் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு 1982ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ’உனக்கென்ன மேலே நின்றாய். எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் எஸ்பிபி குரலில் வாலி வரிகளில் உருவான இந்த பாடலின் ரீமேக்கை ஒரு இசைக்குழு வெளியிட்டுள்ளது

lokesh kamal

இந்த பாடலை தற்போது மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தனது இதயத்தை தொடும் வகையில் இருப்பதாகவும் கமல்ஹாசன் பாடலின் வேறு வடிவத்தில் உள்ள இந்த பாடல் அனைவரையும் கவரும் என்றும் எம் எஸ் விஸ்வநாதன் எஸ்பிபி மற்றும் வாலி ஆகியவைகளுக்கு நன்றிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள விக்ரம் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

From around the web