’துப்பாக்கி 2’ படத்தில் கமல்ஹாசனா?

 
thuppaakki 2

தளபதி விஜய்யின் திரை உலக வரலாற்றில் துப்பாக்கி திரைப்படம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும், அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த படத்திற்கு பின்னர்தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் சம்பளம் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் சமீபத்தில் டிராப் ஆனதையடுத்து துப்பாக்கி 2’ படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி ’துப்பாக்கி 2’ படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. விஜய்க்காக தயார் செய்து வைத்திருந்த திரைக்கதையை கமல்ஹாசனுக்காகக ஏஆர் முருகதாஸ் சில திருத்தங்கள் செய்ய இருப்பதாகவும் இதனை அடுத்து இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பதும் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் விக்ரம் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’துப்பாக்கி 2’ படத்திலும் கமலஹாசன் நடிப்பார் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web