வேல்முருகனை ஜோஸ்யராக்கி வெளியேற்றிய கமல்ஹாசன்!

 

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே இந்த வாரம் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் அவர்களில் சனம், பாலாஜி, ரியோ, சோம்சேகர் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய ஐந்து பேர் நேற்று காப்பாற்றப்பட்டனர் என்பது தெரிந்ததே 

அதன் பின்னர் மீதமுள்ள 6 பேர்களின் வெளியேறுபவர் யார் என்பதை இன்று சொல்வதாக கமல் அறிவித்திருந்தார். இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரோமோ வீடியோவில் அவர் வேல்முருகனிடம் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் தான் வெளியேறுவேன் என்று நினைக்கின்றேன் என்று அவர் கூறினார் 

அப்போது ’நீங்கள் ஜோசியர் ஆகி விட்டீர்களா? என்று காமெடியுடன் கூறி சிரித்தார் கமல். இதிலிருந்து வேல்முருகன் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்பது உறுதியாகி உள்ளது. அது மட்டுமின்றி இன்றைய புரமோவின் கடைசி பகுதியில் வேல்முருகன் கதவருகே நிற்பதும் அவரை அனைவரும் வழி அனுப்புவது போன்ற காட்சியும் உள்ளது. எனவே இந்த வாரம் வேல்முருகன் இருந்து வெளியேறி உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

ஆரம்பம் முதலே பாட்டு பாடுவதை தவிர வேறு எதிலும் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்த வேல்முருகன், இந்த வாரம் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web