வனிதாவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்த கமல் ஹாசன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ஒரு வழியாக வார இறுதி வந்துவிட்டது. கமல் ஹாசன் நேற்றைய நிகழ்ச்சியில் வித்தியாசமான முறையில் வரவேற்பு கொடுத்ததுடன், சுப ஸ்ரீயின் இறப்பு குறித்து பேசினார். அதன்பின்னர் பிக் பாஸ் வீட்டில் முந்தையநாள் நிகழ்ச்சியின் தொடர்ச்சி காண்பிக்கப்பட்டது. சாண்டி தனது மனைவி மற்றும் மகளை கண்ணீரோடு வழியனுப்பினார். அதன்பின்னர் லாலா இந்த 3 மாதத்தில் பெரிதாக வளர்ந்துவிட்டார், மேலும் தன்னை மறந்துவிட்டார் என்று புலம்ப
 
வனிதாவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்த கமல் ஹாசன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு வழியாக வார இறுதி வந்துவிட்டது. கமல் ஹாசன் நேற்றைய நிகழ்ச்சியில் வித்தியாசமான முறையில்  வரவேற்பு கொடுத்ததுடன், சுப ஸ்ரீயின் இறப்பு குறித்து பேசினார்.

வனிதாவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்த கமல் ஹாசன்!!

அதன்பின்னர் பிக் பாஸ் வீட்டில் முந்தையநாள் நிகழ்ச்சியின் தொடர்ச்சி காண்பிக்கப்பட்டது. சாண்டி தனது மனைவி மற்றும் மகளை கண்ணீரோடு வழியனுப்பினார். அதன்பின்னர் லாலா இந்த 3 மாதத்தில் பெரிதாக வளர்ந்துவிட்டார், மேலும் தன்னை மறந்துவிட்டார் என்று புலம்ப போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறினர்.

அதன்பின்னர் வனிதா அனைவருக்கும் நிலாச் சோறு ஊட்டினார், பார்வையாளர்கள் பலரும் வனிதாவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கமல் ஹாசனும் “பல கேலிக்குரிய பட்டப் பெயர்களை சுமந்த வனிதா, இன்று பிக் பாஸ் வீட்டில் ஒரு அன்பான தாயாகவே பார்க்கப்படுகிறார்” என்று கூறினார். இது குறித்த பாராட்டுகளையும் தெரிவித்தார்.

பார்வையாளர்களும் வனிதா இந்தமுறை பேசும்போது எந்தக் குறுக்கீடும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web