இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் சொன்ன கமல் ஹாசன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அனைவரும் எதிர்பார்க்கும் வார இறுதி ஒரு வழியாக வந்து சேர்ந்தது. இந்தக் கேள்விகள் கேட்கப்படுமா இல்லை இந்தக் குறும்படம் காட்டப்படுமா? என்று எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே. பிக் பாஸ் 1 சீசனில் கமல் ஹாசன் இருந்ததைப்போல், மற்ற இரண்டு சீசன்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் மூன்றாவது சீசனில் பேச ஏன் இவ்வளவு யோசிக்கிறார்? என்று தெரியவில்லை. வார இறுதியின் மீதான எதிர்பார்ப்பு இனி வரும்
 
இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் சொன்ன கமல் ஹாசன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அனைவரும் எதிர்பார்க்கும் வார இறுதி ஒரு வழியாக வந்து சேர்ந்தது. இந்தக் கேள்விகள் கேட்கப்படுமா இல்லை இந்தக் குறும்படம் காட்டப்படுமா? என்று எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே.

பிக் பாஸ் 1 சீசனில் கமல் ஹாசன் இருந்ததைப்போல், மற்ற இரண்டு சீசன்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் மூன்றாவது சீசனில் பேச ஏன் இவ்வளவு யோசிக்கிறார்? என்று தெரியவில்லை.

இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் சொன்ன கமல் ஹாசன்!!

வார இறுதியின் மீதான எதிர்பார்ப்பு இனி வரும் வாரம் வாரங்களில் குறையவே வாய்ப்புள்ளது, இன்னும் சிலர் அடுத்த சீசனை வேறு யாராவது தொகுத்து வழங்கினால், நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நேற்றைய நிகழ்ச்சியில், இஸ்ரோவிற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பேசிய கமல் ஹாசன், இது, தோல்வியல்ல. ஆராய்ச்சி மையமானது சந்திரனில் சேர்க்கும் டிரான்ஸ்போர்ட் கம்பெனி அல்ல. அங்கு ஏதேனும் தவறு நடந்திருந்தால், என்ன கம்பெனி நடத்துகிறீர்கள் என்று கேள்வி கேட்கலாம்.


பல லட்சம் மைல்கள் தாண்டியதே நம்முடைய வெற்றியாகும், நெருங்கப் போகிறோம் என்று எதிர்பார்க்கையில், 2 கிமீ தொலைவில் வெற்றியை நழுவவிட்டோம். இதுவே நம்முடைய வெற்றிதான் என்று கூறியதுடன் சிவம் குழுவினருக்கு வாழ்த்துகள் மற்றும் ஆறுதலை தெரிவித்தார்.

From around the web