முதல் வாரமே ஏமாற்றிய கமல்ஹாசன்: பிக்பாஸ் ரசிகர்கள் அதிருப்தி

 

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் முதல் இரண்டு நாள் கலகலப்பும் சண்டை சச்சரவாக சென்றது. ஆனால் அதன் பிறகு சொந்த கதை, சோக கதை மற்றும் ஹார்ட், ஹார்ட் பிரேக் புகுத்தும் டாஸ்க் ஆகியவை காரணமாக ஜவ்வாக இழுக்கும் நிலையில் இருந்தது

ஒரு வழியாக அந்த டாஸ்க் முடிவடைந்தது என்று நிம்மதியாக பிக்பாஸ் ரசிகர்கள் இருந்த நிலையில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் கமல் முன்னிலையில் மீண்டும் ஹார்ட் ஹார்ட் பிரேக் குத்தும் காட்சிகளே இருந்ததால் பிக்பாஸ் ரசிகர்கள் பொறுமை இழந்து ஐபிஎல் பார்க்க சென்றுவிட்டனர்.

முதல் வாரத்திலேயே போட்டியாளர்கள் இடையே சண்டை சச்சரவு வந்த நிலையில் அந்த சண்டையை குறித்து கமல்ஹாசன் காரசாரமாக விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வழவழா கொழகொழா என்று அந்தச் சண்டை பற்றி சிறிது நேரம் மட்டுமே பேசிவிட்டு மீண்டும் ஹார்ட், ஹார்ட் பிரேக் குத்தும் டாஸ்க்கிற்கு வந்துவிட்டார்

எனவே வழக்கமான நாட்களின் காட்சிகளை விட சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் கமலஹாசன் ஏமாற்றிவிட்டதாக பிக்பாஸ் ரசிகர்கள் கருதுகின்றனர்.  பரபரப்பான சண்டை காட்சிகள் விறுவிறுப்பான வாத விவாதங்கள் இருந்தால் மட்டுமே அடுத்து வரும் நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களை சென்றடையும் என்றும் இல்லாவிட்டால் அனைவரும் ஐபிஎல் பார்க்க சென்று விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web