பைனான்ஸ் வாங்குவதிலும் உலக நாயகனா? கமல் குறித்த ஒரு பரபரப்பு செய்தி

உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள ஒரு திரைப்படம் குறித்து கடந்த சில மாதங்களாக செய்திகள் கோலிவுட்டில் உலாவி வருகிறது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்திற்கு பைனான்ஸ் வாங்குவதற்காக கமல் முயற்சித்த போது கொரோனா காலத்தில் யாரும் இவ்வளவு பெரிய தொகையை ஃபைனான்ஸ் செய்ய விரும்பவில்லை என்று கூறப்பட்டது. மேலும் ரஜினி கமல் இணையும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய தொகை பணம் தேவைப்படுவதால்
 

பைனான்ஸ் வாங்குவதிலும் உலக நாயகனா? கமல் குறித்த ஒரு பரபரப்பு செய்தி

உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள ஒரு திரைப்படம் குறித்து கடந்த சில மாதங்களாக செய்திகள் கோலிவுட்டில் உலாவி வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்திற்கு பைனான்ஸ் வாங்குவதற்காக கமல் முயற்சித்த போது கொரோனா காலத்தில் யாரும் இவ்வளவு பெரிய தொகையை ஃபைனான்ஸ் செய்ய விரும்பவில்லை என்று கூறப்பட்டது. மேலும் ரஜினி கமல் இணையும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய தொகை பணம் தேவைப்படுவதால் தென்னிந்தியாவில் யாரும் இந்த படத்திற்கு அவ்வளவு பெரிய தொகையை ஃபைனான்ஸ் செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் கமலஹாசன் வெளி நாட்டில் இருக்கும் தனது நெருங்கிய உறவினர் ஒருவர் மூலமாக வெளிநாட்டில் இந்த படத்திற்கு பைனான்ஸ் வாங்க முடிவு செய்துள்ளாராம். இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் ஒரு மிகப் பெரிய தொகை கிடைக்கும் என்றும் அதன் பின்னர் ரஜினி கமல் படத்தின் பூஜை போடப்படும் என்றும் கூறப்படுகிறது

From around the web