டிஜிட்டலில் மீண்டும் வெளியாகிறது கமலின் காதல் பரிசு

கமல்ஹாசன் நடித்து கடந்த 1987ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காதல் பரிசு. ஆர்.எம் வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிக்க கமல், அம்பிகா, ராதா, ஜெய்சங்கர் முதலானோர் நடித்த சென் டி மெண்ட் ஆக்சன் கலந்தது இந்த படம். இளையராஜா இசையமைத்து இருந்தார். கூ கூ என்று குயில் கூவாதோ, ஏய் உன்னைத்தானே உள்ளிட்ட பாடல்கள் புகழ்பெற்று விளங்கின. இந்த படத்தை மறைந்த இயக்குனர் ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார். சத்யா மூவிஸ் தனது பழைய படங்களை எல்லாம் தூசி
 

கமல்ஹாசன் நடித்து கடந்த 1987ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காதல் பரிசு. ஆர்.எம் வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிக்க கமல், அம்பிகா, ராதா, ஜெய்சங்கர் முதலானோர் நடித்த சென் டி மெண்ட் ஆக்சன் கலந்தது இந்த படம். இளையராஜா இசையமைத்து இருந்தார். கூ கூ என்று குயில் கூவாதோ, ஏய் உன்னைத்தானே உள்ளிட்ட பாடல்கள் புகழ்பெற்று விளங்கின.

டிஜிட்டலில் மீண்டும் வெளியாகிறது கமலின் காதல் பரிசு

இந்த படத்தை மறைந்த இயக்குனர் ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார். சத்யா மூவிஸ் தனது பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி டிஜிட்டலில் மறுபடியும் வெளியிட்டு வருகிறது.

ஏற்கனவே தங்களது தயாரிப்பான பாட்ஷா உள்ளிட்ட படங்களை டிஜிட்டலில் கொண்டு வந்துள்ளனர்.

இப்போது காதல் பரிசையும் கொண்டு வருகின்றனர். இப்படம் நாளை டிஜிட்டலில் வெளியாகிறது.

From around the web