ரஜினி நலம் பெற கடைசியாக வாழ்த்து தெரிவித்த கமல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 10 நாட்களாக அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென படக்குழுவினர் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது
இந்த நிலையில் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று மதியம் திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்ததாகவும் இரண்டு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து அரசியல்வாதிகள் திரையுலக பிரமுகர்கள் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அனைவரும் வாழ்த்து தெரிவித்த பின்னர் கடைசியாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில் நண்பர் ரஜினி விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த் டுவிட்டர் பக்க்த்தை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்
ரஜினியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்காத கமல் குறைந்தபட்சம் அவர் உடல் நலம் இன்றி இருக்கும்போது வாழ்த்து தெரிவித்தார் என்று ரஜினி ரசிகர்கள் இந்த வீட்டுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர்
நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் @rajinikanth
— Kamal Haasan (@ikamalhaasan) December 25, 2020