ஜெ.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த கமல்!!

அந்தவகையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு சில தினங்களுக்கு முன்னர் மூச்சுத்திணறல் ஏற்பட, அவர் உடனடியாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறிகளில் மூச்சுத் திணறலும் ஒன்று என்பதால், அவருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால், அவர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார். வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு ஜூன் 6 ஆம் தேதி உடல் நலம் தேறியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. மேலும் ஜூன் 6 ஆம் தேதி இவரைத் திமுக கட்சி
 
ஜெ.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த கமல்!!

அந்தவகையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு சில தினங்களுக்கு முன்னர்  மூச்சுத்திணறல் ஏற்பட, அவர் உடனடியாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறிகளில் மூச்சுத் திணறலும் ஒன்று என்பதால், அவருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தொற்று உறுதியானதால், அவர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார். வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு ஜூன் 6 ஆம் தேதி உடல் நலம் தேறியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

ஜெ.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த கமல்!!

மேலும் ஜூன் 6 ஆம் தேதி இவரைத் திமுக கட்சி சார்பில் எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் எனப் பலரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அந்தவகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து ஜெ.அன்பழகன் உடல்நலம் தேறி வருவதாகக் கூறினார்.

இந்த நிலையில் உடல்நிலை மோசமாக நேற்று காலை ஜெ.அன்பழகன் காலமானார். ஜெ.அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலினைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த செய்தியினை கமல் ஹாசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

From around the web