அனிதாவின் பேச்சுக்கு கைதட்டிய கமல்: பொறாமையில் அர்ச்சனா!

 
அனிதாவின் பேச்சுக்கு கைதட்டிய கமல்: பொறாமையில் அர்ச்சனா!

அனிதாவின் பேச்சுக்கு கமலஹாசன் கை தட்டியதும் அதனை பார்த்து அர்ச்சனா பொறாமையில் பொங்கும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளன

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை விஜய்டிவி மிக சிறப்பாக எடிட் செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் அனிதாவின் சுமங்கலி குறித்த பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன் அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தனது இரண்டு கைகளையும் தட்டினார். பிறகு எப்போதுதான் இதைப்பற்றிப் பேசுவது என்று ஆவேசமாக அவர் கூறியதை அடுத்து அனிதா முதல் முறையாக உணர்ச்சிவசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

கடந்த சில நாட்களாகவே பார்வையாளர்களால் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டுவரும் அனிதாவுக்கு இன்று கமல் முன்னிலையில் பாராட்டு பெற்றது பாசிட்டிவாக கருதப்படுகிறது. மேலும் அனிதாவுடன் அவ்வப்போது சண்டைகளில் ஈடுபட்டு வந்த ஷிவானியும் அவருக்கு ஆதரவு கொடுத்தார் என்பது ஆச்சரியமான ஒன்றாகும் 

ஆனால் அதேநேரத்தில் அனிதாவுக்கு கிடைத்த இந்த வெகுமதியை பார்த்து அர்ச்சனா பொறாமையில் வெடித்தது அவரது முக பாவனையில் இருந்து தெரிய வருகிறது. மொத்தத்தில் இன்று அனிதா கமல்ஹாசனிடம் பாராட்டு பெற்றிருப்பது பாசிட்டிவ் ஆகவே கருதப்படுகிறது

From around the web