தொழிலதிபர் வசந்தகுமார் மறைவுக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் எம்பியும், தொழிலதிபரும், நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் சற்று முன்னர் கொரோனாவுக்கு பலியானார் என்ற செய்தி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் தனது டுவிட்டரில்,
 

தொழிலதிபர் வசந்தகுமார் மறைவுக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் எம்பியும், தொழிலதிபரும், நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் சற்று முன்னர் கொரோனாவுக்கு பலியானார் என்ற செய்தி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு.

ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், ‘அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

From around the web