கடைசி நிமிடத்தில் கூட அனிதாவுக்கு அட்வைஸ் செய்த கமல்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று அனிதா வெளியேறிய நிலையில் கமல்ஹாசனுடன் அவர் பேசியபோது தான் 84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் தான் வெளியேற்றப்பட்டு விடுவேன் என்று நினைத்ததாகவும் 84 நாட்கள் இருந்தது தனது பெருமையாக இருப்பதாகவும் கூறினார் 

இந்த நிலையில் விடை கொடுக்கும் போது கமல் கடைசியாக ’மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று அனிதாவுக்கு அட்வைஸ் செய்தார். தன்னுடைய கருத்துக்கள் மட்டுமே முன்வைத்து கொண்டே இருக்கக்கூடாது என்றும் மற்றவர்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்’ என்று கமல்ஹாசன் தெரிவித்தார் 

anitha

அதற்கு பதிலளித்த அனிதா ’ஆம் இனிமேல் அவ்வாறு இருக்க முயற்சி செய்கிறேன்’ என்றும் அதே போல் இந்த வீட்டில் இருந்து எமோஷனல் அதிகமாக ஆக கூடாது என்ற பாடத்தை கற்றுக் கொண்டேன் என்றும் அவர் தெரிவித்தார் 

தான் சிறுவயதில் இருந்தே சந்தோசமாக இருந்தாலும் கோபமாக இருந்தாலும் அதிகமாக எமோசனல் ஆவேன் என்றும் இனிமேல் அவற்றை கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பேன் என்றும் அனிதா கூறினார் மேலும் சக போட்டியாளர்களிடம் விடைபெறும்போது தன்னுடைய முதல் வேலை ஹனிமூனுக்கு செல்வது தான் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web