களமிறங்கியது "களத்தில் சந்திப்போம்" திரைப்படம்...,

"சூப்பர் குட்  ஃபிலிம்ஸ்"ன் 90வது படைப்பு இன்று திரையரங்குகளில் வெளியானது...!
 
திரையரங்குகளில் வெளியானது களத்தில் சந்திப்போம் திரைப்படம்...,

சூப்பர் குட் பிலிம்ஸ் இன் 90-வது திரைப்படம் ஆகிய களத்தில் சந்திப்போம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியது. இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் "யுவன் சங்கர் ராஜா" இசையமைத்துள்ளார் இத்திரைப்படத்தினை இயக்குனர் ராஜசேகர் இயக்கியுள்ளார்

kalathil santhippom

இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் ஜீவா  நடித்துள்ளார். நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய "என்றென்றும் புன்னகை" திரைப்படம் இன்றளவும் மக்களிடையே பேசப்படுகிறது குறிப்பாக  இவரது நடிப்பில் வெளியாகிய "சிவா மனசுல சக்தி" என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது .

தற்பொழுது இவர் நடித்த களத்தில் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் இவருடன்" டிமான்ட்டி காலனி"  கதாநாயகனாகிய நடிகர் அருள்நிதியும் இணைந்து நடித்துள்ளார் ஜீவா மற்றும் அருள்நிதியின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் இவர்களுடன் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில்  வெளியாகிய "கடைக்குட்டி சிங்கம்" திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

From around the web