கலைமாமணி விருது பெரும் சிவ கார்த்திகேயன், சரோஜா தேவி மற்றும் யோகி பாபு இன்னும் பலர்...

நடிகர் சிவா கார்த்திகேயன், சரோஜா தேவி, சௌகார் ஜானகி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு மேலும் பலர் கலைமாமணி விருது பெறுகின்றனர்.
 

கலைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு வருடம் தோறும் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி சிறப்பிப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கலைமாமணி விருது பெறும் நட்சத்திரங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

இதில், நடிகர் சிவா கார்த்திகேயன், சரோஜா தேவி, சௌகார் ஜானகி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஐசரி கணேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், கவுதம் மேனன், யோகி பாபு, சங்கீதா, மதுமிதா, திவ்யதர்ஷினி என பலரும் இடம் பெற்றுள்ளனர்.

From around the web