"கலைமாமணி" விருது பெறும் நம்ம "தேனடை!"

"கலைமாமணி" விருது பெறும் நடிகை மதுமிதா!
 
வாழ்த்துக்கள் கூறும் ரமேஷ் பாலாவின் ட்விட்டர் பக்கம்!

தன் நடிப்பாலும், தனது காமெடி திறத்தாலும் இன்று மிகப்பெரிய காமெடி கதாநாயகியாக இருப்பவர் நடிகை "மதுமிதா". நடிகர் விஜய்யுடன் "ஜில்லா" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் "மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியுடன் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

madhumita

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் "காக்கி சட்டை" படத்திலும்,நடிகர் விக்ரம் பிரபுவுடன் "வெள்ளைக்கார துரை" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் உருவாகி வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படமான "ஒரு கல் ஒரு கண்ணாடி" என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பேசப்பட்ட காமெடி கதாநாயகியாக இருந்தார். பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

தற்போது இவர் "கலைமாமணி" விருது பெற்றுள்ளார். இவ்விருதானது  இவரது நடிப்பிற்கும், இவரது திறமைக்கும் கிடைத்த பரிசாக அமைந்துள்ளது.இதற்காக ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். ரமேஷ் பாலா ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் இவரது போட்டோ வைரலாக பரவுகிறது. மேலும் இவருக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணமாக உள்ளது.

From around the web