சூப்பர் ஸ்டார் நடிகருக்காக தேனிலவை தள்ளி வைத்த காஜல்: தெலுங்கு திரையுலகம் ஆச்சரியம்!

 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் நடிப்பதற்காக தனது திட்டமிட்ட தேனிலவை காஜல் அகர்வால் தள்ளி வைத்ததால் தெலுங்கு திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்

நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவருடன் திருமணம் நடந்தது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் கணவர் கௌதம் உடன் வெளிநாட்டிற்கு தேனிலவு செல்ல காஜல் திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அந்த திட்டத்தை அவர் தற்போது மாற்றிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

சிரஞ்சீவியுடன் அவர் நடித்து வரும் ’ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற இருப்பதன் காரணமாக முதலில் ’ஆச்சார்யா’ படப்பிடிப்பு அதன் பின்னரே தேனிலவு என்று அவர் முடிவு செய்துள்ளதாகவும் இதற்கு அவரது கணவரும் அனுமதி கொடுத்து விட்டதாகவும்  கூறப்படுகிறது 
அடுத்த வாரம் ’ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பையிலிருந்து காஜல் அகர்வால் வர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரும் முக்கியமான நிகழ்வான தேனிலவை ஒத்தி வைத்துவிட்டு சிரஞ்சீவி படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ள காஜலுக்கு தெலுங்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

From around the web