சிறிய கடையில் 9 வருடமாக சாப்பிடும் காஜல்

சிறிய கடையில் உணவுடன் சேர்ந்து அன்பையும் பரிமாறிவருகின்றனர்.
 

தல அஜித், தளபதி விஜய் படங்களில் நடித்துவரும் முன்னணி தென்னிந்திய பிரபல நடிகை காஜல் அகர்வால். அண்மையில் தான் இவருக்கு தொழிலதிபர் கவுதம் கிட்ச்லு என்பவருடன் திருமணம் ஆனது. 

இதனிடையே நடிகை காஜல் அகர்வால் பொள்ளாச்சியில் இயங்கி வரும் மிக எளிய உணவகமான சாந்தி மெஸ்ஸில் உணவருந்திவிட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், “சாந்தி அக்காவும் பாலகுமாரனும் உணவுடன் சேர்ந்து அன்பையும் பரிமாறிவருகின்றனர். அதனால் தான் இவர்கள் சமைக்கும் உணவு 27 வருடங்களாக ருசியாக இருக்கிறது.

அதனால் தான் இவர்களின் அழகான சிறிய உணவகத்திற்கு நானும் 9 வருடமாக வந்து செல்கிறேன்” என தெர்வித்துள்ளார்.


 

From around the web