முதல்முறையாக நிச்சயதார்த்த மோதிரத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்

 
முதல்முறையாக நிச்சயதார்த்த மோதிரத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்

தமிழ் உட்பட தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் காஜல் அகர்வால் திடீரென அக்டோபர் 30-ஆம் தேதி தனது திருமணம் நடைபெறும் என்று கூறினார்

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவருடன் தனக்கு திருமணம் என்றும் இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார் 

இந்த நிலையில் முதல் முறையாக தனது நிச்சயதார்த்த மோதிரம் கூடிய புகைப்படத்தை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். வைரத்தால் ஆன இந்த நிச்சயதார்த்த மோதிரத்துடன் கூடிய காஜல் அகர்வால் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

திருமணத்திற்குப் பின்னரும் காஜல் அகர்வால் தொடர்ந்து நடிப்பார் என்றும் ஏற்கனவே அவர் நடித்துக்கொண்டிருக்கும் ’இந்தியன் 2’ திரைப்படத்தை அவர் முடித்துக் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் காஜல் அகர்வால் நடித்த வெப்தொடரான ’லைவ் ’என்ற தொடரை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார் என்பதும் இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web