இயக்குனரின் மனைவிக்காக பால் விளம்பரம் செய்த காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் காஜல் அகர்வால் இயக்குனர் ஒருவரின் மனைவிக்கு அவர் கேட்காமலேயே உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் சீனுவைட்லா என்பவரின் மனைவி ரூபா வேதிக் என்ற பெயரில் பசும்பால் விற்பனையை சமீபத்தில் தொடங்கியுள்ளார். இந்த பால் விளம்பரத்தில் இயக்குனரின் மனைவியிடம் இருந்து சம்பளமே பெறாமல் நடித்து கொடுத்துள்ளார். நல்ல பொருள் மக்களை சென்றடைய தான் உதவியாய் இருக்க முடிவு செய்துள்ளதாகவும், அதனால் தான் இந்த விளம்பரத்தில் நடிக்க பணம்
 

இயக்குனரின் மனைவிக்காக பால் விளம்பரம் செய்த காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் காஜல் அகர்வால் இயக்குனர் ஒருவரின் மனைவிக்கு அவர் கேட்காமலேயே உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குனர் சீனுவைட்லா என்பவரின் மனைவி ரூபா வேதிக் என்ற பெயரில் பசும்பால் விற்பனையை சமீபத்தில் தொடங்கியுள்ளார். இந்த பால் விளம்பரத்தில் இயக்குனரின் மனைவியிடம் இருந்து சம்பளமே பெறாமல் நடித்து கொடுத்துள்ளார். நல்ல பொருள் மக்களை சென்றடைய தான் உதவியாய் இருக்க முடிவு செய்துள்ளதாகவும், அதனால் தான் இந்த விளம்பரத்தில் நடிக்க பணம் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

காஜல் அகர்வால் விளம்பரத்திற்கு பின்னர் வேதிக் பால் தெலுங்கு மாநிலங்களில் நல்ல விற்பனையை எட்டியுள்ளதாகவும், இனி எந்த பொருளை அறிமுகம் செய்தாலும், அதற்கு காஜல் தான் விளம்பரம் செய்வார் என்றும் ரூபா தெரிவித்துள்ளார்

From around the web