மன ஆறுதலுக்காக திருப்பதி சென்ற காஜல் அகர்வால்

பிரபல நடிகை காஜல் அகர்வால், திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தை என்பது தெரிந்ததே. படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் அவ்வப்போது அவர் திருப்பதி சென்று ஏழுமலையானை சந்திப்பது வழக்கம் இந்த நிலையில் நேற்று தனது குடும்பத்தினர்களுடன் காஜல் அகர்வால் திருப்பதி சென்றார். ஆனால் அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் ரசிகர்களை அப்புறப்படுத்தி பின்னர் காஜல் அகர்வாலையும் அவரது குடும்பத்தினர்களையும் பாதுகாப்பாக கோவிலின் உள்ளே
 

பிரபல நடிகை காஜல் அகர்வால், திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தை என்பது தெரிந்ததே. படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் அவ்வப்போது அவர் திருப்பதி சென்று ஏழுமலையானை சந்திப்பது வழக்கம்

இந்த நிலையில் நேற்று தனது குடும்பத்தினர்களுடன் காஜல் அகர்வால் திருப்பதி சென்றார். ஆனால் அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் ரசிகர்களை அப்புறப்படுத்தி பின்னர் காஜல் அகர்வாலையும் அவரது குடும்பத்தினர்களையும் பாதுகாப்பாக கோவிலின் உள்ளே அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஜல், ‘மன ஆறுதலுக்காக குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தேன்” என்று கூறினார்

From around the web