மணக்கோலத்தில் காஜல் அகர்வால்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

 
மணக்கோலத்தில் காஜல் அகர்வால்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது 
முதலில் மும்பையிலுள்ள ஸ்டார் ஓட்டலில் இந்த திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் காஜல் அகர்வாலின் மும்பை வீட்டிலேயே திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது 

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்த திருமணத்தில் இரு வீட்டாரும் சேர்ந்தே 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை காஜல் அகர்வாலின் திருமணம் நடந்ததாகவும் இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து காஜல் அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்தியன் 2 உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web