தமிழ் படத்தில் முழு ஹிந்தி பாட்டு போட்டு ஹிட் ஆக்கிய இளையராஜா

இசைஞானியின் இசைசாதனைகளுக்கு அளவே இல்லை அவரின் இசை சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம் அவ்வளவு இருக்கிறது இளையராஜாவின் இசை பற்றி பேசுவதற்கு. மகேந்திரனின் படங்கள் ஒவ்வொன்றும் காவியம்.அந்த காவியங்களுக்கு உயிர் கொடுத்தது இசைஞானி இளையராஜா என்றால் மிகையாகாது. பிரபல எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய கதையை மையமாக கொண்டு திரைக்கதை அமைத்து மகேந்திரன் இயக்கிய படம்தான் நண்டு. 1981ம் ஆண்டு வெளியான இப்படத்தின் கதைப்படி கதாநாயகி திருமணம் செய்யப்போகும் ஒரு நாயகன் இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஹிந்தி பேசுபவர். முறைப்படி
 

இசைஞானியின் இசைசாதனைகளுக்கு அளவே இல்லை அவரின் இசை சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம் அவ்வளவு இருக்கிறது இளையராஜாவின் இசை பற்றி பேசுவதற்கு.

தமிழ் படத்தில் முழு ஹிந்தி பாட்டு போட்டு ஹிட் ஆக்கிய இளையராஜா

மகேந்திரனின் படங்கள் ஒவ்வொன்றும் காவியம்.அந்த காவியங்களுக்கு உயிர் கொடுத்தது இசைஞானி இளையராஜா என்றால் மிகையாகாது.

பிரபல எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய கதையை மையமாக கொண்டு திரைக்கதை அமைத்து மகேந்திரன் இயக்கிய படம்தான் நண்டு. 1981ம் ஆண்டு வெளியான இப்படத்தின் கதைப்படி கதாநாயகி திருமணம் செய்யப்போகும் ஒரு நாயகன் இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஹிந்தி பேசுபவர். முறைப்படி பொண்ணு பார்க்க வந்த இடத்தில் மாப்பிள்ளை பாடுவது போன்ற காட்சி அமைப்பு. அப்போது இனிமையாக வரும் ஒரு பாடல்தான் ஹெய் சே ககுன் என்ற பாடல்.

மிக இனிமையான அருமையான இந்த பாடலை மிஸ் செய்தவர்கள் தவறாமல் கேளுங்கள் அப்படி ஒரு காதல், இனிமை, சந்தோஷம் இப்பாடலில் இழையோடும்.

அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த ஹிந்தி பாடகர் புபேந்திரா, தமிழ் பாடகி எஸ். ஜானகி அவர்கள் இணைவில் இப்பாடலை கம்போஸ் செய்திருந்தார் இளையராஜா.

தமிழ் படத்தில் ஹிந்தி பாடலா என நம்மை முகம் சுழிக்க செய்யாமல் இப்பாடல் நம்மை மெய் மறக்க செய்தது என்றால் மிகையில்லை. அப்படி ஒரு இனிய பாடல் இது. ஒளிப்பதிவாளராக மறைந்த அசோக்குமார் இயற்கை அழகை இப்பாடலில் அள்ளி வந்திருப்பது இப்பாடலுக்கு கூடுதல் பலம்.

From around the web