த்ரில்லர் படத்தில் மீண்டும் இணையும் கதிர்-ஆனந்தி!

 

கதிர் மற்றும் ஆனந்தி இணைந்து நடித்த பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியிருந்தார் என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கதிர் மற்றும் ஆனந்தி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். இந்த படத்தில் நடிகர் நரேன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ஹாரிஸ் என்பவர் இயக்க உள்ளார் 

ஏஏஏஆர் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் மேலும் சில முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

kathir anandhi1

இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்த கதிர், அதன் பின்னர் இந்த படத்தில்தான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, சமீபத்தில் வெளியான ‘கைதி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்த நரேன் நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web