சாலையில் சடலமாக மீட்கப்பட்ட காதல் பட நடிகர்...

2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இப்படத்தை இயக்கினார். 

 

பரத், சந்தியா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த காதல் திரைப்படம் தமிழகமெங்கும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் அதில் பணியாற்றிய நடிகர்களுக்கும், டெக்னீசியன்களுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 

இந்த படத்தில் விருச்சிககாந்த் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு. சிறிய காமெடி சீன் தான் என்றாலும் இது பலரையும் கவர்ந்தது. இன்றுவரை மக்களுக்கு ஞாபகம் இருக்கும் வகையில் அந்த சீன் அமைந்தது. நடிகர் பாபு அதன்பிறகு தளபதி விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். 

அதற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். அதிலும் அவரது தாய் தந்தை சமீபத்தில் மரணமடைந்துள்ளனர். இதனால் மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளான அவர் சாலைகளில் சுற்றித்திரியும் புகைப்படத்தை சிலர் எடுத்து வெளியிட, திரைத்துறையில் இருந்து அபி சரவணன் போன்ற சிலர் அவருக்கு உதவி செய்துள்ளனர். ஆனாலும் ஊரடங்குக்கு பிறகு அவரது நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையில் சாலையில் இருக்கும் ஆட்டோவில் படுத்து உறங்கிய அவர்  காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web