என்னடா பாட்டுக்குமா டீசரு...!

மெட்ராஸ் படத்தின் மூலம் ரசிகர்களிடையே "அன்பு அண்ணா" என்று அழைக்கப்பட்டவர் நடிகர் கலையரசன்.இத்திரைப்படத்தில் நடிகர் கலையரசனின் நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.இதனால் இவருக்கு புதியதாக ரசிகர்கள் கூட்டம் உருவாக்கியது.மேலும் இப்படத்தின் மூலம் பட வாய்ப்புகள் அதிகமாக வந்தது.

நடிகர் கலையரசன் "காலக்கூத்து" ,"ராஜா மந்திரி" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிகர் தினேஷ் நடிப்பில் வெளியாகி இருந்த "அட்டகத்தி" என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.அட்டகத்தி திரைப்படத்தில் நடிகர் தினேஷ் நடித்திருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் மக்கள் மனதில் சிரிப்பை கொடுத்து மக்களிடையே மிகுந்த பெயரையும் பெற்றுத்தந்தது.
நடிகர் கலையரசன் ,"சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்துடன் "கபாலி" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது .மேலும் நடிகர்கலையரசன் "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாராவுடன் "ஐரா" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் நடிகர் சூர்யாவுடன் "என்ஜிகே" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள பாடல் "கடல் தாண்டி வந்தாய்". இப்பாடல் இப்பாடலின் டீசர் தற்போது வெளியாகி வைரலாக பரவிக் கொண்டு வருகிறது இப்பாடலின் நடிகர் கலையரசனுடன், நடிகை லாஸ்யா நடித்துள்ளார்.இப்பாடல் ஒரு விதமான காதல் பாடல் என்பதால் காதலர்களுக்கு பரிசாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது வெளியாகியுள்ள இப்பாடலின் டீஸர் வைரலாக பரவுகிறது.