கடைக்குட்டி சிங்கம்’ திரைவிமர்சனம்

கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம் இரண்டு மனைவிகள் இருந்து ஒரு ஆண் வாரிசு இல்லையே என்ற வருத்தத்தில் இருக்கும் சத்யராஜ், மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்கிறார். பெண் பார்க்க வந்தபோது தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வர உடனே பெண் பார்க்கும் படலத்தை கேன்சல் செய்கிறார். இந்த நிலையில் ஐந்து பெண் குழந்தைகளுக்கு பின்னர் ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது. அந்த குழந்தைதான்
 
kadaikutti singam

கடைக்குட்டி சிங்கம்’ திரைவிமர்சனம்கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

இரண்டு மனைவிகள் இருந்து ஒரு ஆண் வாரிசு இல்லையே என்ற வருத்தத்தில் இருக்கும் சத்யராஜ், மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்கிறார். பெண் பார்க்க வந்தபோது தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வர உடனே பெண் பார்க்கும் படலத்தை கேன்சல் செய்கிறார். இந்த நிலையில் ஐந்து பெண் குழந்தைகளுக்கு பின்னர் ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது. அந்த குழந்தைதான் கார்த்தி

ஐந்து அக்காள், மாமன்மார்கள், முறைப்பெண், இரண்டு அம்மா, ஒரு அப்பா என சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் விவசாயி கார்த்தியின் வாழ்க்கையில் சாயிஷா குறுக்கிடுகிறார். சாயிஷாவை காதலிப்பதால் வீட்டில் எதிர்ப்பு வலுக்கின்றது. முறைப்பெண்ணி திருமணம் செய்யாமல் எப்படி இன்னொரு பெண்ணை திருமணம் செய்யலாம் என அக்காக்கள் சண்டைக்கு வர ஒற்றுமையாக இருந்த வீட்டில் பிரச்சனைகள் எழுகிறது. அனைவரையும் சமாதானம் செய்து சாயிஷாவை கார்த்தி கரம் பிடித்தாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதி

கடைக்குட்டி சிங்கம்’ திரைவிமர்சனம்விவசாயி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் கார்த்தி. முதல் காட்சியில் தொடங்கும் ரேக்ளா ரேஸ் முதல் கிளைமாக்ஸ் கோவில் காட்சி வரை கார்த்தியின் நடிப்பில் எந்த இடத்திலும் சோடை போகவில்லை. இந்த படம் கார்த்திக்கு இன்னொரு ‘பருத்தி வீரன்’ என்று சொல்லலாம்

என்னதான் பாவாடை தாவணி காஸ்டியூமில் இருந்தாலும் சாயிஷா கிராமத்தி பெண் வேடத்திற்கு செட் ஆகவில்லை. ஆனால் முறைப்பெண்களாக நடித்திருக்கும் பிரியா பவானிசங்கர் மற்றும் அர்த்தனா பினு ஆகியோர் நடிப்பு மிக அருமை

சத்யராஜூக்கு அதிக வாய்ப்பு இல்லையென்றாலும் கொடுத்த வாய்ப்பில் பின்னி பெடலெடுத்துள்ளார். அதேபோல் அவரது இரண்டு மனைவிகளான விஜி சந்திரசேகர், பானுப்ரியா நடிப்பும் அருமை. சூரியின் காமெடி ஓரளவுக்கு ஓகே.

டி.இமானின் இசையில் கிராமத்து கீதங்கள் காதுக்கு இனிமை. பின்னணி இசையும் இந்த படத்தின் பிளஸ்களில் ஒன்று

முதல் பத்து நிமிடங்களில் இத்தனை கேரக்டர்களை குழப்பமில்லாமல் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்ததிலேயே பாண்டிராஜ் வெற்றி பெற்றுவிட்டார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் விறுவிறுப்பும் செண்டிமெண்டும் அதிகம் என்பதால் குடும்ப ஆடியன்ஸ்களுக்கு விருந்து. சொதப்பலான வில்லன், மெதுவாக நகரும் முதல் பாதி, சுமாரான ஆக்சன் காட்சிகள் படத்தின் பலவீனம்

ஆனால் ஒருசில குறைகள் இருந்தாலும் கடைசி பத்து நிமிட கோவில் கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக குடும்பத்துடன் ஒருமுறை அனைவரும் பார்க்க வேண்டிய படம்

3.5/5

From around the web