கபாலி ஆட்டத்தை இன்னும் பாக்கலையே... சும்மா அதிரபோகுது அண்ணாத்த!
அண்ணாத்த பட சூட்டிங் மிக விரைவில் தொடங்க இருப்பதாக நம்ம தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tue, 9 Feb 2021

அதனை தொடர்ந்து இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதெராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் படி மீண்டும் வீடு திரும்பினார் ரஜினி.
இந்நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு வரும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கின் போது தான் நடிகர் ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது, மேலும் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள ரஜினி விரைவில் இப்படத்தை முடித்து விடுவார் என நம்பப்படுகிறது.