தமன்னா பிறந்த நாளில் வாழ்த்திய கபடி கோச்: ஏன் தெரியுமா?

தமிழ் தெலுங்கில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் தமன்னா என்பது தெரிந்ததே. தமிழில் அஜித் விஜய் உள்பட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து முடித்துள்ள தமன்னா, தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்
இந்த நிலையில் தற்போது தமன்னா நடித்து வரும் தெலுங்கு திரைப்படமான ’சீடிகார்’ என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதை அடுத்து இந்த படம் வெளிவந்த பின் அவர் மீண்டும் டோலிவுட்டில் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது \
இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை தமன்னா கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்திய திரையுலகின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகர் தமன்னாவின் பிறந்தநாளை ஒட்டி அவர் கபடி பயிற்சியாளராக நடித்து வரும் ’சீடிகார்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கபடி கோச் பயிற்சியாளர் ஜூவாலா அவர்கள் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து, தமன்னாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவருடைய கேரக்டரை தான் தமன்னா இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக உள்ளதை அடுத்து தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது