காலா’ ரிலீஸ் எப்போது: டுவிட்டரில் தனுஷ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கான்வே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் சினிமாவுலகின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் மாற்றி அமைக்கப்படும் என கூறப்பட்டது. திரைப்படங்கள் சென்சார் ஆன தேதிப்படி ரிலீஸ் செய்யப்படும் என விஷால் ஏற்கனவே அறிவித்திருந்ததால் காலா திரைப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 27ஆம் தேதிக்கு பதிலாக தற்போது ஜூன் 7 என மாற்றி அமைக்கபப்ட்டுள்ளது. இந்த
 

காலா’ ரிலீஸ் எப்போது: டுவிட்டரில் தனுஷ் அறிவிப்புசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கான்வே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் சினிமாவுலகின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் மாற்றி அமைக்கப்படும் என கூறப்பட்டது.

திரைப்படங்கள் சென்சார் ஆன தேதிப்படி ரிலீஸ் செய்யப்படும் என விஷால் ஏற்கனவே அறிவித்திருந்ததால் காலா திரைப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 27ஆம் தேதிக்கு பதிலாக தற்போது ஜூன் 7 என மாற்றி அமைக்கபப்ட்டுள்ளது.

இந்த தகவலை நேற்றிரவு தனுஷ் தனது டுவிட்டரில் உறுதி செய்தார். ‘காலா’ திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், நானா படேகர், சமுத்திரக்கனி, ஹூமோ குரேஷி, சம்பத்ராஜ், அர்விந்த் ஆகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

From around the web