‘காலக்கூத்து’ திரைவிமர்சனம்

மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘காலக்கூத்து’ திரைப்படம் நீண்ட காலதாமதத்திற்கு பின்னர் இன்று வெளியாகியுள்ளது இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம் சிறுவயது முதலே கலையரசன், பிரசன்னா ஆகிய இருவரும் நண்பர்கள். அப்பா, அப்பாவை இழந்த பிரசன்னா, கலையரசனின் அம்மா மரணத்திற்கு பின் உயிர் நண்பர்களாக மாறுகின்றனர். இந்த நட்பு இளைஞர் பருவத்திலும் நீடிக்கின்றது. இந்நிலையில் கலையரசன் தன்ஷிகாவை காதலிக்கின்றார். அதேபோல் ஸ்ருஷ்டி டாங்கி பிரசன்னாவை காதலிக்க இந்த காதலுக்கு கலையரசன் உதவுகிறார்.
 

‘காலக்கூத்து’ திரைவிமர்சனம்மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘காலக்கூத்து’ திரைப்படம் நீண்ட காலதாமதத்திற்கு பின்னர் இன்று வெளியாகியுள்ளது இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

சிறுவயது முதலே கலையரசன், பிரசன்னா ஆகிய இருவரும் நண்பர்கள். அப்பா, அப்பாவை இழந்த பிரசன்னா, கலையரசனின் அம்மா மரணத்திற்கு பின் உயிர் நண்பர்களாக மாறுகின்றனர். இந்த நட்பு இளைஞர் பருவத்திலும் நீடிக்கின்றது. இந்நிலையில் கலையரசன் தன்ஷிகாவை காதலிக்கின்றார். அதேபோல் ஸ்ருஷ்டி டாங்கி பிரசன்னாவை காதலிக்க இந்த காதலுக்கு கலையரசன் உதவுகிறார். இந்த நிலையில் திடிரென இருவரின் காதலுக்கும் சிக்கல் ஏற்படுகிறது. ஸ்ருஷ்டி டாங்கே வேறொருவரை திருமணம் செய்ய அப்பாவின் மிரட்டலால் சம்மதிக்கின்றார். தன்ஷிகாவை அவரது தாய்மாமனுக்கே திருமணம் செய்து கொடுக்க பெற்றோர்கள் முடிவு செய்கின்றனர். இருவரின் காதல் வென்றதா? வீழ்ந்ததா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை

‘காலக்கூத்து’ திரைவிமர்சனம்கலையரசன் இந்த படத்தில் நடித்துள்ளார் என்று சொல்வதை விட ஹரி என்ற கேரக்டரில் வாழ்ந்துள்ளார் என்றே கூறலாம். நட்பு, காதல், துரோகம் கண்டு பொங்குதல், என அவரது நடிப்பில் ஒரு நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

பிரசன்னாவுக்கு அமைதியான கேரக்டர். முடிந்தவரை நன்றாக செய்துள்ளார் என்றாலும் இந்த கேரக்டருக்கு இயக்குனர் வேறு நடிகரை பயன்படுத்தியிருக்கலாம்

தன்ஷிகாவுக்கு முதல் பாதியில் நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் இரண்டாவது பாதியில் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு பாராட்டுதலுக்குரியது.

ஸ்ருஷ்டி டாங்கேவின் கன்னக்குழி ஒன்றே போதும் பார்த்து கொண்டே இருக்கலாம். ஆனால் இயக்குனர் இவருக்கு இன்னும் அதிக காட்சிகள் கொடுத்திருக்கலாம்

‘காலக்கூத்து’ திரைவிமர்சனம்ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் அனைத்தும் இனிமை. இன்னொரு இசைஞானியின் பாடல்களை கேட்பது போன்ற சுகம். பின்னனி இசையும் அருமை

இயக்குனர் நாகராஜன் முதல் பாதியில் காதல், கல்லூரி, காமெடி காட்சிகளை 80களில் வெளிவந்த படத்தில் தோன்றும் காட்சிகள் போல் அமைத்துள்ளார். அதனால் பழைய படம் பார்ப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் தவறை சரிசெய்துள்ளார். எதிர்பாராத கிளைமாக்ஸ் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்

மொத்தத்தில் காலக்கூத்து’ நடுத்தர வயதினர்களை ஈர்க்கும் ஒரு நல்ல படம்
ரேட்டிங்: 3/5

From around the web