காலா கெட்டப்பில் காலாவின் நண்பர்...!

மிரட்டிவிட காத்திருக்கும் பிரபல மலையாள நடிகர்....!
 
ட்விட்டரை கலக்கும் பிரபல மலையாள நடிகர்....!

மலையாள ரசிகர்களால் "மெகாஸ்டார்" என்று அழைக்கப்படுபவர் நடிகர் மம்முட்டி. இவர் "தி கிரேட் ஃபாதர்", "மாஸ்டர் பீஸ்", போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகர் துல்கர் சல்மானின் தந்தையாவார்.இவரைப் போலவே இவரது மகன் துல்கர் சல்மானும் மலையாளத்தில் பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி இருந்த "சார்லி" என்ற திரைப்படம் வேற லெவல் ஹிட்டடித்தது.நடிகர் துல்கர் சல்மான் தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ,ஓ காதல் கண்மணி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 

mammootty

தமிழில் நடிகர் மம்முட்டியின்  நடிப்பில் வெளியாகியிருந்த "தளபதி" என்ற திரைப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தில் இவருடன் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் நடித்திருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த இத்திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தான் போஸ்ட் செய்துள்ள போஸ்டர் தனது நண்பர்  ரஜினிகாந்தின் "காலா" திரைப்படத்தின் கெட்டப்பில் உள்ளது.இதனைக் காணும்போது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் மற்றும் மலையாள சினிமாவும் மகிழ்ச்சியிலும் ஆனந்தத்திலும் உள்ளது.

From around the web