கே.பாலசந்தர் பட ஹீரோ மகளுக்கு திருமணம்: திரையுலகினர் வாழ்த்து!

 

தமிழ் திரையுலகில் கடந்த 2000ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த ஹீரோ ஒருவரின் மகளின் திருமணம் நேற்று விமரிசையாக நடந்தது. இதனை அடுத்து திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
கே பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானார் ரமேஷ் அரவிந்த். அதன்பின் பாலச்சந்தர் இயக்கிய உன்னால் முடியும் தம்பி, டூயட் உள்ளிட்ட படங்களில் அவர் முக்கிய வேடத்தில் நடித்தார் 

இந்த நிலையில் ரமேஷ் அரவிந்தின் மகள் நிகாரிகா திருமணம் நேற்று நடந்தது. மாப்பிள்ளை அக்சய் என்பதை முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்தது என்பதும் இது பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது

ramesh arvind niharika

அக்சய் மற்றும் நிகாரிகா திருமணம் நேற்று பெங்களூரில் நடந்த போது கன்னட திரை உலக பிரமுகர்கள் மற்றும் தமிழ் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த திருமணம் குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்த ரமேஷ் அரவிந்த் தனது மகளின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரமேஷ் அரவிந்த் மகளின் திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web