தற்போது வைரலாகும் ஜோதிகாவின் குடும்ப புகைப்படம்
பல ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா தனது குடும்பத்துடன் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகிறது.
Mon, 8 Feb 2021

தல அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.
இதன்பின் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, மாதவன், கமல், ரஜினி என பலருடைய படத்தில் நடித்து முன்னணி கதாநாயகினார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்து பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார், ஆனால் மீண்டும் 16 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
நடிகை ஜோதிகாவின் அக்கா நடிகை நக்மாவை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இதுவரை நடிகை ஜோதிகாவின் அம்மா, அப்பாவை பலரும் பார்த்ததில்லை. இந்நிலையில் முதல் முறையாக நடிகை ஜோதிகாவின் அம்மா, அப்பாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.