போடு! மீண்டும் சேருது இந்த ஜோடி!

மீண்டும் இணையும் ""காதலில் விழுந்தேன்" ஜோடி
 
நடிகை சுனைனாவின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் போஸ்டர்...,

2008 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் "காதலில் விழுந்தேன்". இத்திரைப்படத்தில் "நடிகர் நகுல்" நடித்திருப்பார். நகுலின் நடிப்பில் உருவாக்கிய திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக "நடிகை சுனைனா" நடித்திருப்பார். மேலும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் "விஜய் ஆண்டனி" இசை அமைத்திருப்பார். விஜய் ஆண்டனியின் இசையில் வெளியாகிய திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று நல்லதொரு வெற்றியை கண்டது.

nithirai nila

"தொண்டன்", "நீர்ப்பறவை" போன்ற பல படங்களில் நடித்திருந்தார் நடிகை சுனைனா. மேலும் இவர் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியாகிய "எனை நோக்கி பாயும் தோட்டா" என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"காதலில் விழுந்தேன்" என்ற படத்திற்கு பின்னர் "நடிகர் நகுல்" ,"மாசிலாமணி" தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்" போன்ற பல படங்களில் நடித்திருந்தார். தற்போது தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  "நித்திரை நிலா". இத்திரைப்படத்தில் "காதலில் விழுந்தேன்" என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த "நடிகை சுனைனா" நடித்துள்ளார். இதனால் இந்த ஜோடி மேலும் ஒரு வெற்றிப்படத்தைக் கொடுக்கும் என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான "அனிருத்" இசையமைத்துள்ளார்.

தற்போது நடிகை சுனைனா தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் வெளியீடு குறித்து போஸ்டரை ஷேர் செய்துள்ளார் அந்த போஸ்டரை காணும் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில்  உள்ளனர். கடந்த வாரம் இவரது நடிப்பில் உருவாகிய  "ட்ரிப்" படம் திரையில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web