ரஜினியால் தோல்வி அடைந்த விஜய் படத்தின் 2ஆம் பாகம்: இயக்குனர் முடிவு

ரஜினியால் தோல்வியடைந்த விஜய் படத்தின் இரண்டாம் பாகம் ஒன்றை விரைவில் இயக்க இருப்பதாக இயக்குனர் ஒருவர் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் சந்திரமுகி வெளியான அதே தினத்தில் வெளியான திரைப்படம் விஜய்யின் சச்சின் சச்சின் திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்த போதிலும் சந்திரமுகி திரைப்படம் மிகப் பெரிய
 

ரஜினியால் தோல்வி அடைந்த விஜய் படத்தின் 2ஆம் பாகம்: இயக்குனர் முடிவு

ரஜினியால் தோல்வியடைந்த விஜய் படத்தின் இரண்டாம் பாகம் ஒன்றை விரைவில் இயக்க இருப்பதாக இயக்குனர் ஒருவர் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் சந்திரமுகி வெளியான அதே தினத்தில் வெளியான திரைப்படம் விஜய்யின் சச்சின்

சச்சின் திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்த போதிலும் சந்திரமுகி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருந்தால் சச்சின் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த படம் தோல்வி அடைந்தது சந்திரமுகி படத்தால்தான் என்றும் திரையுலக பிரமுகர்கள் அப்போது கூறினார்

இந்த நிலையில் தற்போது சச்சின் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க அந்த படத்தின் இயக்குனர் ஜான் மகேந்திரன் முடிவு செய்திருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்த கதை தன்னிடம் தயாராக இருப்பதாகவும் விஜய் அனுமதி அளித்தால் உடனடியாக அந்த படத்தை இயக்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் தான் இல்லாவிட்டாலும் வேறு யாராவது ’சச்சின் 2’ படத்தை இயக்கினாலும் எனக்கு சந்தோஷமே என்றும் அவர் கூறி உள்ளார். விஜய் மனது வைத்தால் மட்டுமே ’சச்சின் 2’ உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் தொடர்ச்சியாக தற்போது ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வருவதால் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ரொமான்ஸ் திரைப்படமான சச்சின் படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web