சொந்த தயாரிப்பில் நடிச்சாதான் இதெல்லாம் கிடைக்கும்… ஜோதிகா பேட்டி!!

சினிமாவில் அழகினைத் தாண்டிய நடிப்பினால் சினிமாவில் பெண்கள் நிலைத்து நிற்க முடியும் என்று காட்டியவர் ஜோதிகா, இவர் அறிமுகமானது என்னவோ இந்தி சினிமாதான் என்றாலும், இவர் நிலைத்து நின்று பல படங்கள் நடித்தது தமிழில்தான். 1999 ஆம் ஆண்டு வாலி படத்தின்மூலம் தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார். குஷி, மொழி, சந்திரமுகி, காக்க காக்க,
 
சொந்த தயாரிப்பில் நடிச்சாதான் இதெல்லாம் கிடைக்கும்… ஜோதிகா பேட்டி!!

சினிமாவில் அழகினைத் தாண்டிய நடிப்பினால் சினிமாவில் பெண்கள் நிலைத்து நிற்க முடியும் என்று காட்டியவர் ஜோதிகா, இவர் அறிமுகமானது என்னவோ இந்தி சினிமாதான் என்றாலும், இவர் நிலைத்து நின்று பல படங்கள் நடித்தது தமிழில்தான்.

1999 ஆம் ஆண்டு வாலி படத்தின்மூலம் தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார்.

சொந்த தயாரிப்பில் நடிச்சாதான் இதெல்லாம் கிடைக்கும்… ஜோதிகா பேட்டி!!

குஷி, மொழி, சந்திரமுகி, காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்கள் இவரது சினிமா வாழ்க்கையில் மிகவும் பேசப்பட்ட திரைப்படங்களாகும். 

திருமணத்திற்குப் பின்னர் 6 ஆண்டுகள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்த அவர் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவை அனைத்துமே சூர்யாவின் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியான படங்களாகும்.

சமீபத்தைய பேட்டியில் சொந்த தயாரிப்பில் மட்டுமே நடிக்க காரணம் என்ன? என்று  ஜோதிகாவிடம் கேட்கப்பட்டது. அவர் பதில் கூறியதாவது, “சொந்தத் தயாரிப்புகளில் தளர்வுகள் கிடைக்கும். குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் அவ்வப்போது நேரத்தினை செலவிட வேண்டும் என்பதால் சொந்தத் தயாரிப்பு தான் சரியான ஒன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

From around the web