நம்ம ஜித்தன் ரமேஷ் கிட்ட இப்படி ஒரு திறமையா? வாயடைத்து போன ரசிகர்கள்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி 106 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். 

 

பிரபல நடிகர் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பொதுவாகவே அமைதியான குணம் படைத்த அவர் சில சமயங்களில் செய்யும் முகபாவனைகள் ரசிகர்களை ஈர்த்தது. அதை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்களும் பறந்தது.

இந்நிலையில் நடிகர் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்ட வாரத்தை பலராலும் மறக்க முடியாது. ஏனென்றால் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக ரமேஷ், நிஷா என இருவர் ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் போட்டியாளர்கள் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர். 

சமீபத்தில் ஜித்தன் ரமேஷ் தங்களது சூப்பர் குட் மூவீஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த 'களத்தில் சந்திப்போம்' படத்திற்கு சக போட்டியாளர்களை அழைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ஜித்தன் ரமேஷ் ஒரு நடன வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

பார்ப்பதற்கு செம மாஸாக இருக்கும் அந்த வீடியோவை பார்த்த சக பிக்பாஸ் போட்டியாளர்கள் டான்ஸை பார்த்து இன்ப  அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனிதா, அர்ச்சனா, ஆஜீத், கேபி, சோம் போன்ற பலரும் அந்தப் பதிவின் கீழே கமெண்ட் செய்து வருவதை பார்க்க முடிகிறது.

From around the web