ஜெயசூர்யா கிரிக்கெட் விளையாட தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா, இரண்டாண்டுகளுக்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என ஐசிசி தடை விதித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் ஜெயசூர்யா பதவி வகித்தபோது, அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் எழுந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்திவந்தது. ஆனால் ஜெயசூர்யாவோ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐசிசியின் ஊழல் தடுப்பு விசாரணைக்கு முறையான
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா, இரண்டாண்டுகளுக்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என ஐசிசி தடை விதித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் ஜெயசூர்யா பதவி வகித்தபோது, அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் எழுந்ததாக புகார் கூறப்பட்டது.

ஜெயசூர்யா கிரிக்கெட் விளையாட தடை

இதையடுத்து ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்திவந்தது. ஆனால் ஜெயசூர்யாவோ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐசிசியின் ஊழல் தடுப்பு விசாரணைக்கு முறையான ஒத்துழைப்பு வழங்காதது மற்றும் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்தது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ள ஐசிசி, இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஜெயசூர்யா பங்கேற்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

From around the web