ஜெயம் ரவியின் புதிய படத்தின் அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘அடங்கமறு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அடுத்ததாக அவர் ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள இன்னொரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனால் பிலிம்ஸ் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளார். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா
 

ஜெயம் ரவியின் புதிய படத்தின் அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘அடங்கமறு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அடுத்ததாக அவர் ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள இன்னொரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனால் பிலிம்ஸ் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளார்.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் கூறியபோது, ‘ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தாருடனும் என் உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவர் நல்ல மனிதனாக, நல்ல நடிகராக உருவானதை நேரடியாக பார்த்து வந்திருக்கிறேன். அவர் எப்போதுமே வழக்கமான சினிமாக்களை விட்டு விட்டு, புதிய முயற்சிகளையே மேற்கொள்பவர். ஒரு கதையோடு நீங்கள் வரும்போதே, அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்ற உடனடி உள்ளுணர்வு தோன்றும். இயக்குனர் என்னிடம் கதையை சொல்லியவுடன், ரவிவை விட யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் சொல்வதை விட, படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் இதை உணர்ந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இன்று சென்னையில் படப்பிடிப்பை துவக்கியிருக்கிறோம் என்று கூறினார்.

From around the web