ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி: ஆனால் ஜெயம் ரவியை விட அதிக சம்பளம்

பிரபல நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள ’பூமி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவர் இயக்குனர் அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று தெரிகிறது இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை டாப்சி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகியாக நடித்தாலும் அவருக்கு ஜெயம் ரவிய விட அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கிட்டத்தட்ட
 

ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி: ஆனால் ஜெயம் ரவியை விட அதிக சம்பளம்

பிரபல நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள ’பூமி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவர் இயக்குனர் அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று தெரிகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை டாப்சி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகியாக நடித்தாலும் அவருக்கு ஜெயம் ரவிய விட அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கிட்டத்தட்ட ஜெயம் ரவி சம்பளத்தை விட இருமடங்கு என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகி வருவதாகவும் இந்த படத்தின் பட்ஜெட் ரூபாய் 36 கோடி என்றும் கூறப்படுகிறது. ஜெயம் ரவி நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படம் இதுதான் என்றும் ஆனால் அதே நேரத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டை தயாரிப்பாளர் இறக்குவதற்கு காரணம் டாப்சி படத்தின் வியாபாரத்தின் மீது உள்ள நம்பிக்கை என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே இயக்குனர் சுந்தர்ராஜன் மகன் தீபக் இயக்கும் ஒரு தமிழ்ப்படத்திலும் டாப்சி நடித்து வருகிறார் என்பதும், அந்த படத்திற்கு அவருக்கு மிகப்பெரிய ஒரு சம்பளம் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. போகிற போக்கை பார்த்தால் நயன்தாரா இடத்தை அவர் பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web