ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு "தலைவி" திரைப்படத்தின் டிரைலர்!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான "தலைவி" படத்தின் டிரைலர் ஆனது தற்போது வெளியானது!
 

2011, 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்று முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. இவர் மக்கள் மத்தியில் அம்மா என்று அழைக்கப்பட்டார்.ஆரம்ப காலத்தில் இவர் திரையுலகில் கதாநாயகியாக வலம் வந்தார். பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்தார். பின்பு செயலாளராக இருந்து கட்சியில் முதல்வராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் முதல்வராக இருக்கும் போதே மரணமடைந்தார். இதனால் அவருக்கு பின்பு கட்சியில் முதலில் பன்னீர்செல்வம் முதல்வராக சில நாட்கள் இருந்தார். பின்னர் அவருக்குப் பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில வருடங்களாக முதல்வராக உள்ளார்.

aravind samy

இந்நிலையில் "இரும்பு பெண்மணி" என்றும் ஜெயலலிதா அழைக்கப்பட்டார்.  இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு "தலைவி" என்ற படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தை ஏ எல் விஜய் இயக்கியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் .

இத்திரைப்படமானது ஏப்ரல் மாதம் 23ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.

From around the web